Thursday 2 October 2014

தட்கல் டிக்கட்-ரெயில்வே ஊழியர் கைது,தட்கல் டிக்கெட்


தட்கல் டிக்கெட் எடுத்து விற்ற ரெயில்வே ஊழியர் கைது

பதிவு செய்த நாள், சனி, மே 31,2014, 3:00 PM IST

நாகர்கோவில்,   குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் வெளியாட்கள் "தட்கல்’’ ரெயில் டிக்கெட்டுகளை எடுத்து அதிக விலைக்கு விற்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நாகர்கோவில் ரெயில் நிலைய "தட்கல்’’ டிக்கெட் எடுக்க வந்தவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக "தட்கல் டிக்கெட்’’ எடுத்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், அவர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த தட்கல் டிக்கெட் மற்றும் முன்பதிவு டிக்கெட் விண்ணப்பங்கள் ஆகியவற்றை சோதனை செய்ததில் அவர் அனுமதியின்றி தட்கல் டிக்கெட்டுகளை எடுத்து வெளிநபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவர் வைத்திருந்த தட்கல் டிக்கெட்டுகள், முன்பதிவு டிக்கெட் விண்ணப்பங்கள், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நேற்று நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் ஜெயிலில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.